MULATHANA MANTHIRAM
பர்சனல் ஃபைனான்ஸ் தொடர்பாக இன்று வாசகர்கள் மத்தியில் நல்லதொரு புரிதலும் ஆர்வமும் ஏற்பட்டு இருக்கிறது. அது ஏதோ ஒருசிலரின் வேலை மட்டுமே என்று நினைத்துக் கொள்ளாமல், ஒவ்வொருவரும் அதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று முனைந்திருக்கிறார்கள்.
இதன் விளைவாக, பொருளாதாரத் துறையில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் உடையவர்களின் தேவை அதிகமாகி இருக்கிறது. அதிலும் விவேகத்துடன் பொருளாதாரத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுபவர்களின் தேவை மிகவும் அதிகம்.
இந்த நூலை எழுதியிருக்கும் டி. பாலசுந்தரம், கோயமுத்தூர் பங்குச் சந்தையின் முன்னள் தலைவர். கோயமுத்தூர் கேப்பிட்டல் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர். பொருளாதாரத் துறையில், வணிகத் துறையில் இவரது ஈடுபாடும் பங்களிப்பும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று.
வாசகர்களின் கேள்விகளுக்கு, பதில்களைத் தரும் வடிவில், டி.பாலசுந்தரம், இன்றைய பங்கு வணிகம், மியூச்சுவல் பண்டுகள், தங்கம், வெள்ளி, நிலம் தொடர்பான முதலீடுகளில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகளை மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.
Language |
Tamil |
---|---|
Publication Type |
Newspaper |
Frequency |
One Time |
Publication Country |
India |
Kindly Register and Login to Lucknow Digital Library. Only Registered Users can Access the Content of Lucknow Digital Library.