Namma Adayalam
நம்ம அடையாளம்
அரசியல் மற்றும் சமூக வார இதழ். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடைபெறும் அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து சொல்லக் கூடியது. வாரம் தோறும் வியாழன் அன்று வெளியாகிறது. தமிழ் மொழியில் மட்டுமே இந்த இதழ் வெளியாகிறது.
நிறுவனர், ஆசிரியர்
குமுதம் வார இதழ் நிறுவனத்தில் இருந்து வெளிவரக் கூடிய குமுதம், குமுதம் ரிப்போர்ட்டர், குமுதம் சிநேகிதி, குமுதம் பக்தி, குமுதம் ஹெல்த், குமுதம் ஜோதிடம், தீராநதி, கல்கண்டு ஆகிய இதழ்களுக்கு குழும ஆசிரியராக பணியாற்றிய திரு.ச.கோசல்ராம் அவர்களால் நிறுவப்பட்டது, நம்ம அடையாளம்.
திரு. ச.கோசல்ராம் அவர்கள் குமுதம் குழுமம், விகடன் குழுமம், சன் நெட் ஒர்கில் இருந்து வெளி வரக்கூடிய தினகரன் தினசரி நாளிதழ் உள்பட தமிழகத்தின் பிரபலமான பத்திரிகைகளில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். தமிழகத்தில் உள்ள பிரபலமான பத்திரிகையாளர்களில் ஒருவர். அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் அனைவருக்கும் மிகவும் நெருக்கமானவர்.
நம்ம அடையாளம் குழு
இதழின் முதன்மை ஆசிரியராக இருக்கும் திரு. கதிர்வேல் என்பவர், சுமார் 35 ஆண்டுகள் பத்திரிக்கையில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். தமிழகத்தின் பிரபலமான நாளிதழ்களான, தினமலர், தினகரன் ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றியவர்.
அரசு பணியில் இருந்து பத்திரிகை மீதான அதீத ஆர்வத்தில், அரசு பணியை விட்டுவிட்டு வெளியேறிய திரு. அருணாசலம் உள்பட இளமையும் துடிப்பும் உள்ள டீம், நம்ம அடையாளம் பத்திரிகையில் அங்கமாக விளங்குகிறது. இவர்கள் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நிருபர்கள் உள்ளனர்.
மிகச் சிறந்த நெட் ஒர்க்கை கொண்ட, நம்ம அடையாளம், கடந்த மே மாதம் முதல் வெளியாகி வருகிறது. மிக குறுகிய காலத்திற்குள் பிரபலம் அடைந்துள்ளது. இதன் விற்பனையும் வேகமாக அதிகரித்து வருகிறது.
Language |
Tamil |
---|---|
Publication Type |
Newspaper |
Frequency |
Weekly |
Publication Country |
India |
Kindly Register and Login to Lucknow Digital Library. Only Registered Users can Access the Content of Lucknow Digital Library.