Ullum Puramum
ஒரு சின்ன சந்தேகம் எப்படியெல்லாம், அது சம்பந்தப்பட்ட அனைவரையும் மனக்கவலைக்கு உள்ளாக்குகிறது, எரிச்சல் கொள்ள வைக்கிறது, அதீத முடிவுகளை எடுக்கத் தூண்டிவிடுகிறது என்று ‘உள்ளும் புறமும்’ நாவலில் பேசுகிறார் வண்ணநிலவன். மனோகரி, சுசீலா, கிருஷ்ணபாரதி என்ற முக்கிய பாத்திரங்களின் மனவோட்டங்களைப் படம் பிடித்துக் காட்டுவதன் மூலமாகவே நாவலை நகர்த்திச் செல்லும் அவரது எழுத்துப் பாணி, வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
கல்கி வார இதழில் தொடராக வெளியான உள்ளும் புறமும், வாசக அன்பர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. கதையின் வசீகரமும் வண்ணநிலவன் எழுத்தின் மாயமும் வாசகர்களைக் கட்டிப் போட்டது. உங்களையும் அப்படியே மெய்மறக்கச் செய்யும் என்பது உறுதி.
Language |
Tamil |
---|---|
Publication Type |
Newspaper |
Frequency |
One Time |
Publication Country |
India |
Kindly Register and Login to Lucknow Digital Library. Only Registered Users can Access the Content of Lucknow Digital Library.