KANDARIYATHANA KANDEN
கோவில்கள் நமது வரலாறு, பாரம்பரியத்தை மட்டும் சொல்லவில்லை, அது நமது முன்னோர்களின் நம்பிக்கைகள், வாழ்க்கை முறை, எண்ணங்கள் அனைத்தையும் பிரதிபலித்து வருபவை. கோவிலுக்குள் இருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு செய்திக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. ஒரு பின்னணி உண்டு.
அதே போல், ஒவ்வொரு கோவிலும் இது மாறுபடுவதும் உண்டு. ஒவ்வொரு ஊரின் வாழ்க்கை முறையை ஒட்டி, இந்த மாற்றங்கள், கோவில் வழிபாட்டு முறைகளில் ஏற்பட்டு இருக்கின்றன. நமது வளமான பல் இன கலாசாரத்தின் வெளிப்பாடாக இந்த மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கின்றன என்று புரிந்துகொள்ள வேண்டும்.
ஸ்ரீநிவாச ராகவன் இந்த நூலில் கோவிலின் ஒவ்வொரு பகுதிக்கும் இருக்கின்ற முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார். கூடவே தென்னகமெங்கும் வியாபித்து இருக்கும் பல கோவில்களில், குறிப்பிட்ட அந்தப் பகுதி எவ்வாறெல்லாம் பெருமைபெற்று இருக்கிறது, வேறு வேறு பொருள்களைக் கொண்டு இருக்கின்றன என்றும் விவரித்துச் செல்கிறார்.
Language |
Tamil |
---|---|
Publication Type |
Newspaper |
Frequency |
One Time |
Publication Country |
India |
Kindly Register and Login to Lucknow Digital Library. Only Registered Users can Access the Content of Lucknow Digital Library.